பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


றலே நல்லொழுக்கமாவது. ஆதலின், இயற்கை இயைபின் காட்சியாம் இவ்வறிவும், இவ்வொழுக்கமும் அழகேயாம். தமிழர் பாடிய நாலடியார் “கல்வியழகே அழகு” என முழங்குகின்றது. தமிழ வில்லியும் “ஒழுக்கத்தழகு” எனப் பாடுகின்றான்! எனவே, அழகு வழிபாடே தமிழ்க் கடவுட் பேராற்றின் தண்ணீராய் அமைந்தது.

தமிழ்க் கடவுட் பேராறு மேற்கூறிய தண்ணீர்ப் பெருக்கால் உலகனைத்தையும் ஒன்றுபடுத்தப் புறப்பட்டது; இருபுறத்தும் பரந்திருந்த கொள்கையினரை எல்லாம் தன்னுட்கொண்டு புரண்டோடியது; “ஊரங்கண நீர் உரவு நீ்ர் சேர்ந்தக்கால், பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்.” பேயைத் தொழுதாரையும் தன்னுட்கொண்டு பெருமானின் பேரடியாராக்கியது. எத்துணை நிறத்தினர் எத்துணைக் கொள்கையினர் இதுபோது தமிழர் என நிலவுகின்றனர்! ஈதன்றோ ஒற்றுமைக் காட்சியின் பெருமை? சிற்சிலபோது இத்தமிழ்க் கடவுட் பேராறு, பெருமலை வெளியிலே தடைபட்டுத் தடைபட்டுச் செல்லும்; சில இடத்தே மலை எதிரே முட்டிக்கொள்ளும்; ஆறும் ஓட்டமின்றித் தேங்கிக் கிடக்கும்; ஓடுந் தண்ணீரில் ஓர் அழுக்கும் இல்லை. தேங்கி நின்றால் திருநீரும் புழுத்துப் போகின்றது. அங்ஙனம் இப்பேராறு புழுத்து நின்ற நிலைகளும் உண்டு. அந்நிலைகளில் அத்திருநீரின் கடவுள் தன்மையால் அம்மலை சிறுகச் சிறுகத் தேய்ந்து பிளவு விடுகின்றது. அவ்விடத்தே பேரொளி ஒன்று புத்தர்