பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


தது எனலாம். அடியார்கள் வரலாற்றுக் குறிப்புக்களை இரண்டாம் இராசராசன் கட்டிய தாராசுரக்கோயில் (ராஜ ராஜபுரம்)கல்லில் செதுக்கியிருக்கக் காண்கிறோம். இந்த இராசராசபுரி வாழும் பொதுமகளிர்க்கே ஒட்டக் கூத்தர் தம் தக்க யாகப் பரணியில் கடைதிறப்புப் பாடுகிறார். இதன் பின்னரே சேக்கிழார் இந்த 12-ஆம் நூற் றாண்டின் பிற்பகுதியில் பெரிய புராணம் பாடினார் எனலாம். பெரிய புராணம் பாடியபின் அதனினும் வேறாகக் கதையை உணர்ந்து இராச ராசபுரத்திற் கல்லிற் செதுக்கியிருப்பார்களென்று கருதுவதற்கில்லை. ஆதலின் அவ-ருக்கும் முந்தியது அது எனலாம். அடியார்கள் வரலாறு தெலுங்கு நாட்டிலும், கன்னட நாட்டிலும் சென்று வீரசைவப் பெருமக்கள் உள்ளத்தையும் மிகமிகக் கவர்ந்தது.

அடியார் வரலாறு ஒட்டக்கூத்தர் உள்ளத்தையும் கவர்ந்திருத்தல் வேண்டும். இந்த அடியார்களில் ஞானசம்பந்தரும் ஒருவர். ஞானசம்பந்தர் பாலுண்ட கதை எல்லோர் நினைவுக்கும் வரும். சங்கரரும் இதனையே நினைத்துப் பாடுகிறார். உமையம்மையின் பாலையுண்பவர் யாராக இருக்கக் கூடும்? சிவபெருமானின் பிள்ளை தானே உமையம்மையின் பாலை உண்ணக்கூடும்? அதிலும் இளையபிள்ளையாகவே இருத்தல் வேண்டும். எனவே, ஒட்டக் கூத்தர் ஞான சம்பந்தரை முருகனென்றே கருதுகிறார். பரணியில் காளி, கோயிலில் வீற்றிருக்கிறாள்; பாம்பணையின்