பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


நினைத்து இராசாவிற்குணர்த்த அக்கினிதேவனை ஏவினபடியென வுணர்க" என்பது அக்குறிப்பு.

அந்த நெருப்புப் பாண்டியனுயிரைக் கொள்ளை கொண்டு உடலம் கிளர்ந்து கொதிப்ப வந்து கொளுத்துகிறது. பாண்டியனுக்கு வேண்டிய அமணர்கள் ஏவின எந்திரங்களும் மந்திரங்களும் பயன்படவில்லை. பாண்டியனுடைய இரண்டு கண் போன்றவர்கள் அவன் மனைவியும் அவன் அமைச்சரும். அவர்கள் அரசனை விட்டு விலகவேயில்லை. பிள்ளையாரை அழைப்போமாயின் இது நல்ல காலமாம் என்று எண்ணுகின்றார் அதிகாரியாகிய குலச்சிறையார்; வைதிக ராச சிங்கமான பிள்ளையார் இருந்த இடத்திற்குச் சென்று முறையிடுகிறார். முத்துப் பல்லக்கில் ஏறி முத்துக் குடைக்கீழ் வருகின்றது வைதிக வாரணம். பிள்ளையார் எதிரே, என் காதலர் எம்பெருமான் இவனுக்கிதுவோ தகவு என்று புலம்புகிறார் பாண்டிமா தேவியார்.

"மாமான்மர பிற்பகன் மண்டிலமொத்
         தெரிமண்டின னென்னு மகீபதிநின்
கோமான்மர பிற்சசி மண்டிலநேர்
         குளிரும்படி காணுதி கோமளமே"

என்று உறுதி கூறுகின்றார் சம்பந்தர்.

இது கேட்டு மகிழ்கிறார் பாண்டிமா-தேவியார். குலச்சிறையாரும் அம்மையாரும் பாண்டியனருகே ஒரு பீடிகையிட்டுப் பிள்ளையாரை “இனிதேறி இருந்தருள் செய்க”' என வேண்டிக் கொள்ளுகிறார்கள்.

66