பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


நோக்கம் வேறுபடும் என்றோம். பொதுவாக இந்த நோக்கங்களை நான்கு வகையில் அடக்கி விடலாம். பொருண்மை, இடம், காலம், வடிவம் (உபாதி, வகை) என்பவையே அவை. ஒரு பொருள் இருக்கிறது என்று சொன்னால், அது எந்தப் பொருளாக இருக்கிறது என்று கூறல் வேண்டும். குடம் என்றால் பொற்குடமா மட்குடமா என்று நோக்க வேண்டும். பொற்குடம் இருந்தால், பொற் குடத்தைப்பற்றிய கேள்வி எழும்போது, "உண்டு" என்போம். அந்த நிலைமையில் இருப்பது மட்குடமே ஆனால் ஆராய்ச்சிக்கு எழுந்த குடம் அதாவது பொற் குடம் "இல்லை" என்போம். இந்த நிலையில் பொருளின் நோக்கத்திற்கு ஏற்பக் "குடம் உண்டு குடம் இல்லை" என்ற இரண்டும் உண்மையாதல் காண்க. அவ்வாறே இடவகை நோக்கத்தால் பலமுடிபுகள் எழ வழி உண்டு. "ஓர் அறையில் இருப்பது" என்ற பொருளில் "குடம் உண்டு" என்றும் "வேறோர் அறையில் இல்லை" என்ற பொருளில் "குடம் இல்லை” என்றும் கூறுவதில் முரண் ஒன்றும் இல்லை. பல முடிபுடை நிலையையே இது விளக்குகிறது. இவ்வாறே குடம் ஒரு காலத்தைக் கருதியபோது "உள்ளது" என்றும், மற்றோர்காலத்தைக் கருதியபோது "இல்லை" என்றும் பேசுவதும் இயல்பேயாம். அவ்வாறே வடிவத்தினை அடிப்படையாகக் கொண்டு பேசும்போது, நீண்ட கழுத்துடைய குடத்தைப்பற்றிக் கேள்வி எழுந்தால் அந்த வடிவமுடையதாக எண்ணும்போது "குடம் உண்டு" என்றும்

9