பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

________________

IV. புலவரைப் பழித்தல்

“தங்களுக்கு மச் சாக்கியர்க்குந்
       தரிப் பொணாத நற் சேவடி
எங்கள் நாயக னேத் தொழிந்திடுக்
       கேமடுத் தொரு பொய்த்தவம்
பொங்கு நூல் வழி யன்றியே புல
       வோர் களைப் பழிக் கும் பொலா
அங்கதர்க் கெளியே னலேன்
       திரு ஆல வாயரன் நிற்கவே.” (3220)


என்ற பாடலின் குறிப்பினைக் காணவேண்டும். அங்கதச் செய்யுள் என்பது ஒன்று என்பது ஒன்று தொல்காப்பியர் கூறுகிறார். கீழ் வெட்டாகப் பாடும் பாடல் அங்கதம். மேல் நோக்காக ஒரு பொருளும் அடிப்படையாக ஒரு பொருளும் தோன்றும். இவ்வாறு வசைபாடுவதும் அங்கதமேயாம். கலைஞர்களை இழிக்கின்ற நிலையினையே சம்பந்தர் இங்குச் சுட்டுகின்றார் எனலாம்.

சமணர்களும் கற்றவர்களே. "கற்றமணர்” (1784) என்பர் சம்பந்தர். சமணர்களும் கலையை வளர்த்தவர்களேயாம். சீவகன் இசையில் வல்ல ஒரு சமணத்தலைவன்: இவன் மணந்த காந்தருவதத்தையும் யாழில் வல்லவளே. சமணராகிய கொங்குவேள் பாடுகின்ற உதயணனும் தன் இசையால் மதயானையை அடக்கி வாசவதத்தைக்கு இசை கற்பித்து அவளை மணக்கின்றான். ஆனால், இவர்களுடைய கொள்கையில் இசையும் பிற கலைகளும் வீட்டுக்கு வழி அல்ல. இந்து மதத் துறவிகளும் இவ்வாறு சில போது கூறு-