பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

________________


வது உண்டு. ஆனால், நாயன்மார்களும், ஆழ்வார்களும் எழுப்பிய பக்திப் புரட்சி, கலைகளுக்கு உயர்ந்ததொரு நிலையைத் தந்தது. அழகினை ஆண்டவன் அவதாரமாகக் கொண்டது.

"மாசறு வீணையும் மாலை மதியமும்,
வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்,
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே,
ஈச னெந்தை இணையடி நீழலே" (6112)

என்ற பாடலே ஒரு புரட்சியாம். இறைவன் இன்பத்தைப் பிற இன்பங்களுக்கு உவமை காட்டுவதற்கு மாறாக இயற்கையின் இன்பத்தினையும் கலையின் இன்பத்தினையும் திருவடி இன்பத்துக்கு உவமை கூறுகின்றார் திரு- நாவுக்கரசர். உலகம் ஆண்டவனாரின் அருளம்மையது வடிவம்; (“உமையலாது உருவம் இல்லை” 4559). அதனை அவ்வாறு காண்பதே காட்சி; அதனை மாறிக் காண்பதாலேயே மயக்கமெல்லாம் வருகின்றன. அழகு ஆண்டவன் இயல்பு. அழகிய வடிவங்களில் ஆண்டவன் அவதாரஞ் செய்கின்றான் என்று இராமானுசர் ஆழ்வார்களைப் பின்பற்றி விளக்குகின்றார்; அழகு அனைவர் மனத்தையும் கவர்வதாகலின், அழகுவழிபாடு ஆண்டவனை அடைவதற்கு எளிய வழி என்று அர்ச்சாவதாரத்தின் பெருமையை அவர் பரக்கப் பேசுகிறார். கலை வழிபாட்டின் வழியே கடவுளைக் காணும் நெறியைத் “திரு நெறிய தமிழ்" (11) என்றும், "ஒளிநெறி" என்றும், "பாடல் நெறி" என்றும், “ஆடல்நெறி”