பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

________________


என்றும் ஞானசம்பந்தர் பேசுகின்றார். கோயில் வழிபாடு புத்தர் சமணர் வழியே தோன்றியிருந்தாலும், தமிழ் நாட்டில் இது எல்லாமாய் ஓங்கியது ஆழ்வார்கள், நாயன்மார்கள் கொண்ட புது நோக்கத்தாலேயாம்.

இசையினைக் காமத்தை விளைக்கும் வீணைச் செல்வம் எனத் திருத்தக்க தேவர் பாடுகிறார். களங்கமற்ற தாயன்பு இயற்கை இசையாகப் பொங்கி வழிவது கேட்ட தேவரும் விமானமும் தம்மையும் அறியாது கீழ் இழிந்தனர் என இசையைப் புகழ்கின்றார் சம்பந்தர்; இங்கே இசையின் தூய நிலை விளங்கக் காண்கிறார்.

"பண்ணமரும் மென் மொழியார்
         பாலகரைப் பாராட்டும் ஓசை கேட்டு
விண்ணவர்கள் வியப் பெய்திவிமானத்தோடும்
         இழியும் மிழலையாமே" (1425)

என வரும் பாடல் காண்க.

இசை ஆனது உள்ளத்தை உருக்கித்தூயது ஆக்குகிறது. “இசையாய் விம்மி அழுமாறு வல்லார்” (1677) என்பர். இசையாலே அறுவகையான உட்பகையும் அழிய அன்பே ஞானமாய் மலர இறைவன் தோன்றுவதனை ஞானசம்பந்தர் பாடுகிறார்.


"வஞ்சமணர் தேரர்மதி கேடர்த
       மனத்தறிவி லாதவர் மொழி
தஞ்சமென என்று முணராத அடியார்
       கருது சைவனிடமாம்