பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

________________


சமணர்களையும் பௌத்தர்களையும் குறிப்பது சம்பந்தர் வழக்கு. ஆதலின், இங்கும் கழிமீன் கவர்வார் பௌத்தர் என்றே கொள்ளலாம். இப்பதிகத்தின் மூன்றாம் பாடலில் சமணரையும் சாக்கியரையும் மயங்க வைத்து,

"பெண்ணகத் தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர்கற் பழிக்கத் திரு வுள்ளமே." (3300)

என்று பாடக் காண்கிறோம். ஆனால்,சில பதிகங்களில் பௌத்தரை மட்டுமோ அமணரை மட்டுமோ குறிப்பதும் உண்டு. (990, 1001, 1346)

இனி, வைதிக சமயத்தில் அவிப்பலி, கொலைப்பலி முதலியவற்றின் பயனாக ஊன் உண்ணல் வழங்கி வந்தாலும், பௌத்தர் சமணர்கள் கொள்கை பரவியதன் காரணமாக,

“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று”

என்பது போன்று மனு தர்மமும் கூறலாயிற்று. கண்ணப்பர் போன்றார் நிலையிலேயே ஊனொடு உண்டல் நன்றாவதனையும், அதனைக் கண்டு சிவகோசரியார் முதலியோர் நடுங்குவதனையும் கண்ணப்பர் வரலாறு சுட்டுகிறதாம். சைவர்களும் ஊன் உண்ணாமையை விரும்பத் தொடங்கிய காலம் அது.

ஊனொடுண்டல் நன்றென வூனொடுண்டல் தீதென,
ஆனதொண்டரன்பினாற் பேசநின்ற தன்மையான் (3369)

எனச் சம்பந்தர் கூறுவது இந்த நிலையையே சுட்டும். இதை முன்னருங் குறிப்பிட்டோம்.