பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

________________


ஆனால், சமணர்களும் பெளத்தர்களும் இதனைப் பற்றி வாதிடுவதனையும் சம்பந்தர் இருவரையும் குறித்துப் பாடும் பத்தாம் பாட்டொன்றில் குறிப்பிடுகின்றார்.


விடக்கொருவர் நன்றென விடக் கொருவர் தீதென
உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்துமை யொர்பாகம்
அடக்கினை புறம்பய மமர்ந்த வுரவோனே. (1795)

எனவே சம்பந்தர் கூறும் பழிவுரைகளெல்லாம் ஆசிவகர், சமணர், சாக்கியர் பிரித்து எத்தனையோ கவடு விட்டு வளர்ந்த எதிர்ப்பினை எல்லாம் ஒருங்கு மயங்க வைத்துக் கூறுவனவே போலும்.

VI. ஆசீவகரும் சம்பந்தரும்

ஆசீவகம் என்பது தனி ஒரு சமயம். இதனைப் பின்பற்றியவர் ஆசீவகர். இவர்கள் துறவினை வற்புறுத்தியவர்கள். திகம்பரராய் ஆடையில்லாராய்த் திரிந்தவர்கள். புத்தர் காலத்தும் மகா வீரர் காலத்தும் அவர்களோடு ஒருங்கு வாழ்ந்த ஒருவர் இம்மதத்தினைக் கண்டவர். இவர்பெயரை மஸ்கரி புத்திரர் என்றும், முக்கலி புத்திரர் என்றும் சமண பௌத்த நூல்கள் கூறும். மற்கலி என்பது தமிழ் நாட்டில் வழங்கிய பெயர். நவகதிர் என்பது அவர்களுடைய மறைநூல்.

இவர்கள் கொள்கையைச் சுருக்கிக் கூறலாம்:- நிலம், நீர், தீ, காற்று, உயிர் என்ற ஐந்து