பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

________________


என ஆசீவகரைப் பற்றிப் பிறர் கூறுவது உண்மையானால் கணிகையோரோடு சேர்வதனையே நோன்பாகக் கொண்ட ஆசீவகர் எனக் கூறலும் ஆம்.

சாதியில் நீங்கிய அத்தவத்தார் (74)

என்பதும் இவர்களைக் குறிக்கலாம். ஆசீவகர்கள் கொல்லாமை, உண்மை, கள்ளாமை, வெஃகாமை என்ற நான்கையே கொண்டு பிரமசரியத்தைத் துறவின் அடிப்படையாகக் கொள்ளாதவர்கள் என்று பலர் கொள்கின்றனர். சமணர் பௌத்தர் ஆசீவகர் என்பார், இவ்வாறு ஒருவரை ஒருவர் பழிப்பது கொண்டே ஞான சம்பந்தர் எல்லோரையும் ஒருங்கு வைத்துப் பழிக்கின்றார் போலும்.

ஆசீவகரும் சமணர்களும் திகம்பரர்களாய்த் திரிந்ததால் இருவரையும் ஒன்றென மயங்கியதும் உண்டு. ஆனால் அடிப்படையில் ஆசிவகர்கள் அநேகாந்த வாதிகள்.

"அயலியர் தாமல்ல ஆசீவர்கள்: திகம்பரராயினும் அநேகாந்த வாதிகளாகிய நிர்க்கந்த ரல்லர் ஆசீவகர்." என்று நீலகேசி உரை கூறுவது காண்க. சம்பந்தர் எல்லோரையும் ஒருங்கு வைத்துக் கூறுவதும் இந்தக் கண்ணோட்டத்தில் எழுந்தது ஆகலாம்.

ஆச்சியப் பேய்கள் (1291) என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஆச்சியம் என்பதற்கு ஹாஸ்யம் எனப் பொருள்கொண்டு நகையை

10