பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151

________________


நோக்கில் புத்தரையும் குறிக்கும். இரட்டுற மொழிந்தே சம்பந்தர் மூவர்க்கும் பொதுவாகப் பொருள் கொள்ளும் வகையில் பாடியுள்ளார் என்பதே ஏற்புடைத்தாகும்.


இப்பாட்டில் விட்டுடுக்கையர் என்பது உடுக்கை விட்டவர் என்று பொருள் தரலாம். குற்றுதல் என்பதற்குப் பறித்தல் என்ற பொருளும் உண்டு. உடுக்கையைப் பிடுங்கி எறிந்து வன்துறவு பூண்டவர் என்று இதற்குப் பொருள் கூறலாம். அன்றியும், பாய், தடுக்கு முதலியவற்றை குறுஉடுக்கை போலக் கொண்டு மறைத்தலின், சமணர் குற்றுடுக்கையர் என்றும் பெயர் பெறுவர். "குற்றுடுக்கையர்" என்பர் சுந்தரர் (7951). குற்றுடுக்கையர் விட்டுடுக்கையர் எனத் தனித்தனிக் கூட்டிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.


"தடுக்கு உடுக்கையர்" (74)

“தடுக்கால் உடல் மறைப்போர்” (134) '
“தடுக்கு அமரும் சமணர்” (674)

என வருதல் காண்க. விட்டுடுக்கையர் என்பதில் விட்டு என்பதற்கு "வான்" என்றும் பொருள் கொள்ளக் கூடுமாதலின் விட்டுடுக்கையர் என்பதற்குத் திகம்பரர் என்பதன் பொருளே கொள்ளலுமாம்.

II (1) பிண்டிபாலரும் (2) மண்டைகொள் தேரரும்
(3) பீலிகொண்டு உழல்வாரும்
(4) கண்ட நூலரும் (5) கடுந்தொழிலாளரும் கழறநின்றவர் (2592)