பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

________________


XXI. புத்தர்தேரர் பொறியில் சமணர் கருவீறிலாப் பித்தர்

இங்குத் தேரர் என்றது புத்தரில் அன்று சிறந்திருந்த பிரிவினர் ஆம்; புத்தர் என்பது பொதுவாக மற்றைய பௌத்தர்களை எல்லாம் குறிக்கும். புத்தராகிய தேரர் என்றும் கொள்ளலாம். கருவீறிலாப் பித்தர் என்பதனை கரு + வீறு + இல்லாப்பித்தர் என்றோ, கரு + ஈறு + இல்லாப் பித்தர் என்றோ கொள்ளுதல் கூடும். குண்டராம் ஆசிவகர் என்று இது பொருள் தரலாம் என முன்னர்க் கூறினோம்.


XXII. (1) குண்டரும் (2) புத்தரும்
(3) கூறையின்றிக் குழுவார் (சமணர்) (3943)

XXIII. (1) நிலையார்ந்த உண்டியினர் (நின்று உண்சமணர்)
(2) நெடுங்குண்டர் (3) சாக்கியர்கள் புலையானார்(2355)

குண்டர் என்பது சமணரைக் குறிப்பது போல வருதலும் உண்டு. இங்கே அம்மணமாய் நிற்பார் அனைவரையும் -சமணர் ஆசீவகர் அனைவரையும் - குறிப்பதாதல் வேண்டும்; குண்டு என்பதனைக் கூறை போர்த்தலோடு சம்பந்தர் முரணணி தோன்றக் கூறுவதிலிருந்து இது விளங்குகிறது.

I. அத்தமண்தோய் துவராடைச் சமணர் குண்டர் (424)
II. குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து மிண்டாடித் திரிதருவார் (501)
III. குண்டுபட்டு அமணாயவரொடும் கூறைமெய் போர்க்கும் மிண்டர் (1435)