பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

________________


IV. கையார் சோறுகவர் குண்டர்களும் துவருடை மெய்யார் போர்வை மண்டையர் (2155)

V. குண்டமணர் துவர்க்கூறைகள் மெய்யிற்கொள்
கொள்கையினார் (435)

VI. குண்டர் வண்துவராடை போர்த்தார் (2440)

VII. குண்டமண் துவர்க்கூறை மூடர் (1751)

உடையிலாமையே குண்டுநிலை என்பார்போல,

VIII. உடையிலாது உழல்கின்ற குண்டரும் (2035)

என்று சம்பந்தர் பாடுதல் காண்க.


அம்மணமாய் நிற்றலே நாணம் நீங்கிய இழிதகைமையின் கொடுமுடி என்று சம்பந்தர் முதலானோர் கருதினர் போலும்.

தடுக்கினை இடுக்கி மடவார்கள்
இடுபிண்டமது உண்டு உழல்தரும்
கடுப்பொடி உடற் கவசர் (3590)
உடுக்கை இன்றியே ஊர்நகவே திரிவார் (710)

என்பன சம்பந்தர் பாடல்கள்.

குவிமுலையார் நகைகாணாது உழிதர்வேனை (4203)

என்றும்,

காவிசேர் கண்மடவார் கண்டு ஓடிக்
கதவு அடைக்கும் கள்வனேன் (4207)

என்றும்,

கூறையில் மிண்டர் (512)

என்றும்,

குவிமுலையார்தம் முன்னே நாணமின்றி
உழிதந்தேன் (6271)

என்றும், திருநாவுக்கரசர் தாம் அம்மணமாய்த் திரிந்த நிலைக்கு இரங்கிப் பாடிய பாடல்கள் இங்கே நினைக்கத் தக்கவையாம். குண்டு என்பது இழிதகைமையாக அதன் முற்றிய நிலையே அம்மணநிலை என்பது தோன்றவும் சம்பந்தர் பாடுகின்றார்.