பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158


குண்டுமுற்றிக் கூறையின்றியே (92)
குண்டராய் முற்றும் திரிவார் (1089)
குண்டுபட்ட மறையவர் (1435)
குண்டாடு குற்றுடுக்கைச் சமணர் (1403)
குண்டாடிச் சமண்படுவார் (3501)
குணடராய் உள்ளார் (4099)

எனவே, அம்மணமாய் நிற்றலின் சமணரும் குண்டர் ஆவர்.

குண்டிகைக் கையுடை குணடர்(3179)
குண்டாடும் சமணர்(3392)
குண்டாடும் சமணர் (3392)
குண்டராம் அமணர் கொளுவும் சுடர் (3343)

எனவரல் காண்க.

குண்டமணர் (435,535,3666), அமண்குண்டர் (303,414), சமண்குண்டர் (244, 1120) அமணர் குண்டர் (2078. 1210) எனப் பல இடங்களிலும் வருவதனைச் சமணரும் குண்டரும் என மேலே நாம் கொண்டது போலப் பொருள் கொள்வதே அன்றிச் சமணராகிய குண்டர் என்றும் பொருள் கொள்ளலாம். பலரையும் ஒன்றாகக் கூறுவதும் சம்பந்தர் போக்கே ஆம்.


கடுக்கள் தின்று கழிமீன் கவர்வார் (2712)

என்பது "கடுக்கள் தின்பார்' என்றும் கழிமீன் கவர்வார்" என்றும் பிரித்துக்கூட்டிச் சமணரையும் புத்தரையும் சுட்டுவதாகக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு வரும் இடம் இன்னமும் பலவாம்.

ஒண்துவரார் துகிலாடை மெய்போர்த்து
      உச்சிகொளாமை உண்டே உரைக்கும்
குண்டர்களோடு அரைக் கூறையிலர் (3913)