பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


ஒழுக்கத்தழகால் உயர்ந்தோர், அதனைப் பழிக்கவே புகுவர். எல்லோரும் உடையின்றியே உலவுவரானால், அது வேறொரு கதை எனலாம். ஆகவே, சம்பந்தர் சமண்மேல் வைத்துக்கூறினாலும், அவர் நோக்கம் புறத்துறவளவில் நின்றுவிடும் கடுந்துறவனைத்தையும் கடிவதே எனலாம்.

II

உடையினைத் துறப்பதனைப் பழிப்பது போலப் பெண்களென உடல் முழுவதும் மூடித் திரிவதனையும் பழிக்கின்றார். அளவுக்கு விஞ்சினால் அமுதமும் நஞ்சாம். எத்தொழிலையும் மிகுதிசெய்தலும் ஒண்ணாது; குறைவாகச் செய்தலும் ஒண்ணாது. இடைவழியாம் நடுநிலையே உயர்நிலையாம். உடையே இன்றி உழல்வதும் பழி; உடம்பிற்குப் போதியவற்றிற்கு மேல் வறிதே உடைகளைச் சுமத்தலும் பழி. வாழ உடுக்கின்றோமே அன்றி, உடுக்க வாழவில்லை. அல்லாக்கால் உடைக்கு அடிமையாவோம். அங்ஙனமே உடைமேல் சினந்து துறந்தால், அதற்கு இல்லாத‍தோர் ஏற்றத்தைக் கொடுத்தவராவோம். இருதலையும் புறஞ்செல்லாது, இடைநின்று, நாட்டின் நிலைக்கும், வழக்கத்திற்கும் ஏற்ற அளவு உடலை மறைக்க உடையணிந்தால் போதும் அன்றோ?

உடையினைப் பற்றிப் பேருரை நிகழ்த்தவோ சம்பந்தர் பிறந்தனர் எனச் சிலர் நகைக்கலாம். அஃது அவர் குற்றம் அன்று. அந்நாளைய சம-