பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


னோர், உண்மையாய்த் தோலுடையினைத் துறக்கவில்லையே என எள்ளி நகையாடல் காண்க. நாணம் என்பதனைக் கருதாது இவ்வாறு உடை இன்றித் திரிவதைப் பழிக்கின்றார்.

நாணார் அமணர் (2,72)
நாணாதுடை நீத்தோர் (1,98)

என வருதல் காண்க. இவர்கள் இவ் வண்ணம் நாணம் என்பது சிறிதுமின்றிப் பெண்கள் எதிர் வருவதே சம்பந்தர் மனத்தில் உறுத்தியது.

பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற சமணீசர் சொல்லே கேட்டுக்,
காவிசேர் கண்மடவார் கண்டோடிக் கதவடைக்குங் கள்வன்.

என்றும்,

(திருநாவுக் - பழமொழி-பண் காந்தாரம்-8)

பதியொன்று நெடுவீதிப் பலர் காண நகை
நாணா துழிதர் வேன்.

(மேற்படி 7)

என்றும் அப்பர் பாடுகின்ற நிலையை நாள் தோறும் கண்டு சம்பந்தர் மனம் புழுங்கியே பாடுகின்றார் போலும்.

தடுக்கினை இடுக்கி மடவார்கள்
இடுபிண்ட மதுஉண்டு உழல் தரும்
கடுப் பொடி உடற் கயவர்.

குருளை எய்திய மடவார் நிற்பவே
குஞ்சியைப் பறித்தும்