பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


கடுநோன்பிகள் என்ற பழிக்கு மறுப்புரையாக நீலகேசி உரை கூறுவதும் காண்க. "யாங்கள் கொலை முதலாகிய பாவ நிவர்த்த்யர்த்தமாகச் சக்திக்குத் தக்கவாறு அநசனாதிகள் செய்து விஷயானுபவம் துறந்தனம். யாங்கள் பலகாலுண்ணவும், தின்னவும், குளிக்கவும், தாம்பூல சேவை முதலாயின பண்ணவும் புகுவோமாகில் ஆர்ஜனரக்ஷணாதி வ்யாபாரங்களால் கொலை முதலாயின பாவங்களும் ஞானத்யான விக்னங்களும் ஆதலின் ‘சக்தி தத் ஸத்யாதபஸி' என்பது எம் ஓத்தாகலின் சத்தியை அதிக்ரமித்து அநசனாதிகள் செய்வதும் இல்லை. வெய்யில் நிலை முதலாயினவும் வனசரராய் நின்று சகல வ்யாபாரங்களும் துறந்து ஒருவழி நிற்றல், இருத்தல் செய்து ஞான த்யானங்கள் பயில்வுழி, வெய்யிலும் மழையும் காற்றும் முதலாயின வந்தால் அவற்றைச் சக்திக்குத் தக்கவாறு பொறுத்தாம். என்னை!

உற்ற நோய்நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.

என்பது எம் ஓத்தாகலின். தாமே வந்தன பொறுத்தல் அல்லது வெய்யில் முதலாயினவற்றுள் வருந்துதலே தவம் என்று சொன்னோமோ? இல்வாழ்க்கைக்கண் நின்றாரும் இல்வாழ்க்கைக் காரியங்களுள் ஒன்று செய்வுழி ஒழிந்த காரியங்கள் துறந்து கிருஷி முதலாயின செய்ய அவ்வழி வந்த வெய்யில் முதலாயினவும் சக்திக்குத் தக்கவாறு பொறுப்பதற்காகக் காயம் வருந்தினாராவரோ?"