பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


என அவர்களைச் சம்பந்தர் பாடுவது காண்க. அத்தகையார் சுக்கும் கடுவும் தின்னவேண்டாவா? அல்லாக்கால் தண்ணீரும் அருந்தாமல் தனியே சாக வேண்டுவதுதான்.

இலைமருதே யழகா நாளுமிடு துவர்க்காயொடு
சுக்குத் தின்னும் நிலை யமண்.
கடுக்கள் தின்று

என்றும் பாடுவது காண்க.

துணியையும் புனலையுமே துறந்தோர், மற்றோர் நாட்டிற்குப் புறப்பட்டுச் செல்வாரைப் போலப் பல பொருள்களை உடன்கொண்டு திரிதல் என்னே வியப்பென நகையாடுகின்றார் சம்பந்தர். அவர்களோ கொல்லாமை என்னும் பேரறத்தைக் காக்கத் துணையாக அவற்றைக் கொண்டு சென்றனர். கொல்லாமை என்பது புறவொழுக்கமாகவும், எதிர்மறை வடிவாகவும் தோன்றினாலும், உண்மையில் நோக்குமிடத்து அன்பு என்னும் உடன்பாட்டு நிலையாம் அகவொழுக்கமாகவே அமைகின்றது. ஆதலின், அதனைப் புறப்பொருள்களே துணையாக வளர்ப்பது எஞ்ஞான்றும் இல்லையாம். அன்றியும் அவர்கள் உடன் கொண்டு செல்லும் பொருள்களே வீட்டிற்கு வழிகாட்டிகள் எனச் சிலர் வற்புறுத்தியபோது அக் கொள்கையைச் சம்பந்தர் மறுத்துரையாடி நகையாடுகின்றார். இது நிழல், இது முதல்; இது முடிவு, இதுவழி; இது இன்றியமையாதது, இது