பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


என்று கருதி அச்சீலங்களுள் இதனை ஆதியாகக் கொண்டு பணித்தார். மற்றைய அறங்கள் ஒரு கூறு; இது ஒரு கூறு என்றபடி.]

எனப் பாடுதல் காண்க. பிறருக்கு இவ்வறம் எவ்வாறு தோன்றியது என்பதனைச் சம்பந்தர் நன்கு புனைந்துரைக்கின்றார்.

சாம வத்தையினார்கள் போல் தலையைப்
பறித்தொரு பொய்த்தவம்,
வேம வத்தை செலுத்தி மெய்ப் பொடி
யட்டி வாயசத்துக்கு நேராமவர்.
                                                 (3-298-)

என்று பாடுதல் காண்க.

தலைபறி செய்து தவமுயல் பவர்,
பகடூர் பசி நலிய நோய் வருதலாற்
பழிப்பாய வாழ்க்கை ஒழியத் தவம்-
முகடூர் மயிர் கடிந்த செய்கையார்.
உறித்தலைச் சுரையொரு குண்டிகை பிடித்துச்சி,
பறித்தலும் போர்த்தலும் பயனிலை.

என வருதலும் நோக்குக.


IX

அவர்கள் பேசிய பேச்சோ இதனினும் நகை தருவதொன்றே. தனித் தமிழும் பேசினார் இல்லை; தனி வடமொழியும் பேசினார் இல்லை. வடமொழிச் சொற்களை மரூஉ மொழியாக்கி வழங்கியமை வடமொழி அறிந்தவர்களுக்கு நகைப்பையே விளைத்திருக்கும். ஆங்கிலேயரிடம் மடையர்களாக அமர்ந்தோர் பேசும் ஆங்கிலத்தையும், கிறிஸ்துவ வெள்ளையர்கள் பேசும் தமிழையும் நாம் கேட்டு நகையாடுவது போல