பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


(அருகந்தணம்) அறிவுடையாரையும் (புத்தணம்- புத்த நம; ஆரியர்; உபாத்தியாயர் - புத்தர் - அறிவுடையோர்) உயர் நிலையடைந்தோரையும் (சித்தணம் - சித்த நம சித்தர் ) போற்றித் தொழும் உள்ளமுடையார். (சிந்தணர்) போற்றித் தொழும் உள்ளமுடையவரானாலும் குற்றமில்லாத சிறப்பு அவர்களுக்கு இல்லை. ஆதலின் திருவாலவாய் அரன் துணை நிற்க, நான் அவர்களுக்கு அஞ்சுபவன் அல்லன்." இந்தப் பாடலில் அந்தணம், அருகந்தணம், புத்தணம், சித்தணம் என அவர்கள் மறை மொழியை எள்ளி நகையாடல் காண்க.

சந்து சேனனும் இந்து சேனனும் தரும சேனனும்
கருமை சேர்.

கந்து சேனனும் கனக சேனனும் முதலாகிய
பெயர் கொளா

மந்தி போற்றிரிந்து ஆரியத்தோடு
செந்தமிழ்ப் பயன் அறிகிலா,

அந்தகர்க் கெளியேன் அலேன் திருவாலவாய்
அரன் நிற்கவே.

"சந்துசேனன் முதலிய பெயர்களைப் புனைந்துள்ளார்கள். இவற்றின் முடிபோ தமிழ் முடிபு. இவற்றின் அடியோ வடமொழியடி. ஆனால், இச் சொற்களோ தமிழுமல்ல; வடமொழியுமல்ல. ஆரியத்தின் இனிமையும் அறியார்; தமிழின் இனிமையும் அறியார். கண்ணிருந்தும் குருடர்களே. இவர்கள் வடமொழி நூலும் செந்தமிழ்