பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


யாது? "இருண்ட மனத்துச் சமணர் கஞ்சி உண்டு மகிழ்ந்தாடும் கழுகுகள்-இவர்களாலே அடியார் மனமெரியச் சிவபெருமான் வசவுண்ணுதல் தன்மையோ? இயல்போ? முறையோ?" என்று பொருள் படுதல் காண்க. ஆதலின் இங்கும் கழு ஏற்றிய கதை கூறப்படவில்லை என்பதாயிற்று. “கழுக்கையர்” என்பதற்கு மயிலிறகுக்குப் பதிலாகக் கழுகு இறகினைக் கொண்டு செல்வோர் என்ற பொருளும் கொள்ளலாம்.

சங்கரர், தமது 'சிவாநந்த லஹரி'யில் சம்பந்தர் திருப்பாலுண்ட சிறப்பினைப் புகழ்ந்துபாடித் 'தமிழ்க் குழவி' என அவரை ஏத்தெடுக்கின்றார். அவரும் கழுவேற்றிய கதையைத் கூறவில்லை. பட்டினத்தடிகளும் கழுமல மும்மணிக் கோவையில் பாலுண்ட கதையைப் பாடுகின்றார்; கழுவேற்றிய கதையைப் பற்றிய குறிப்பொன்றும் அவர் நூல்களில் காணோம். நம்பியாண்டாருக்கு முன்னர் இச்செய்தியை எவரும் குறிப்பிட இல்லை. குறிப்பிடாமையாலே நடக்க இல்லை என்றுகொள்வது அத்துணை வலிவுடைய முடிவு அன்று என்பதனை யாம் அறிவோம். சம்பந்தர் பாட்டின் போக்கிற்கு இக்கதை முரண்படுகின்றது என்பதோடு பிறர் இக்கதையைக் குறிப்பிடாமையையும் ஒருங்கு வைத்து நோக்கினால், இச்செய்தி நடக்கவில்லை என்ற நமது முடிவு வலிவடைய இல்லையா? ஒருவனுயிராக இருக்கின்றானா என்பது கேள்வி. அவனைப் பல நூறு