பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


மக்கள் காணவில்லை என்ற ஒன்றினாலேயே அவன் இறந்து பட்டான் என முடிவு கட்ட முடியாது. ஆனால், கடலில் சென்று வீழ்ந்திறப்பதாகச் சென்றான் என்பதை நாமறிந்து வைத்த பின், அவனை நாளும் கண்டு குலாவ வேண்டிய நெருங்கிய சுற்றத்தாரும், அண்டை அயலாரும், நண்பினரும் அவனைப் பற்றி ஒன்றும் அறியாமல் பல ஆண்டு கழியுமானால் அவன் தற்கொலை உண்டான் என்ற முடிவு வலிவடைய இல்லையா? அங்ஙனமே இந்த எதிர்மறைச் சான்றும் என்க.

பின்வந்த நம்பியாண்டார் நம்பியே திருமுறை கண்டு தொகுத்தவர். அப்பெரியார் சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகையின் வழிநூலாகத் திருத்தொண்டர் திருவந்தாதி ஒன்று பாடியுள்ளார். அந்நூல் திருத்தொண்டர்கள் வரலாறு ஒவ்வொன்றையும் தனித்தனியே சுருக்கிக் கூறுவதாகும். அவர் திருஞானசம்பந்தர் வரலாற்றை இரண்டு பாட்டால் பாடுகின்றார்; ஒன்றில் பாலுண்ட கதையைப் பாடுகின்றார்; மற்றொன்றில் சம்பந்தர் செங்கட் சோழனையும், முருக நாயனாரையும், திருநீலநக்க நாயனாரையும் திருக்கடைக் காப்பில் வைத்துப் பாடியதையும் தாம் அப்பெரியாருக்கு ஓர் அந்தாதி மாலை சூடியதனையும் குறித்துப் பாடு கின்றார்.

வைய மகிழ யாம்வாழ அமணர்வலி தொலைய,
ஐயன் பிரமபுரத்தரற் கம்மென் குதலைச் செவ்வாய்ப்
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தையலருள் பெற்றனன் என்பர் ஞான சம்பந்தனையே.