பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல
சந்தா ரகலத்து நீலநக்கன் பெயர்தான் மொழிந்து
கொந்தார் கடையார் பதிகத் திலிட்டடியேன் கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே.

என்று பாடுதல் காண்க. ஆனால், நம்பிகள் கழு ஏறிய கதையை அறியாமல் இல்லை; எனினும் திருவருட் பெருமையால், அப்பெரியார் இங்கு வரலாறு கூற வந்த இந்த ஓரிடத்தில் குறிக்காது போகின்றார் அன்றோ? மேலே, இரண்டாவது பாட்டில் குறிக்கப்பட்ட திருஞான சம்பந்தர் திருவந்தாதியில்,

தொண்டினம் சூழச் சுரிகுழலார் தம்மனந் தொடர
வண்டினஞ் சூழ வரும்இவன் போலும் மயிலுகுத்த
கண்தினஞ் சூழ்ந்தவனைப் பிரம்போர் கழுவா வுடலம்
விண்டினஞ் சூழக் கழுவின வாக்கிய வித்தகனே.

என்று பாடுகின்றார்.

கழுவா உடலம் கழுவின வாக்குதல்.

என முரண் தொடைபடப் பலமுறை பாடுகின்றார். பின்னும் அவர்,


கெழு
குண்டர்க்கு வைகைக் கரையன்று
வான்கொடுத்த கலிகெழு
திண்டோட் கவுணியர் தீபன்.

என்றும்,


தொழுநீர் வைகைக் குழுவாயெதிர்ந்த உறிக்கைப்
          பறித்தலைக் குண்டர் தங்கள்,
கழுவா உடலங் கழுவினமாக்கிய கற்பகமே.

என்றும்,