பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


மறைக்காட்டில் அமர்ந்திருந்தருளும் செல்வப் பெருமடத்து அணைய வந்து, வாயில் காவலர்க்குத் தாங்கள் வருமுறை தன்மை எல்லாம் அறிவித்தனர். வாயில் காவலரால் அறிந்த பிள்ளையார் அவர்களை உள்ளழைத்துக் கன்னிநாடு அமணர் தம்மாற் கட்டழிந்தமை அறிந்தனர். வந்தவர்களும் “அமணர் தம்மை வென்றருள வேந்தனை வெண்ணீறு இடுவித்துச் சிவநெறியைத் தென்பாண்டி நாட்டில் நிலைநாட்ட வேண்டும்,” என வேண்டினர். பிள்ளையார் இச்செய்தியை ஆளுடைய அரசுக்கு அறிவிக்க, அவரோ சம்பந்தர் மேல் வைத்த அன்பினால், “அமண் கையர் வஞ்சனைக்கு ஒரு முடிவில்லை. உறுகோள் தானும் தீய; எழுந்தருள ஒண்ணாது,” என்று தடுத்தனர். பிள்ளையாரோ “சிவனது திருவடியைப் போற்றுவாருக்குத் தீங்கு ஏது?” என்று உறுதி கூறி,

“ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே.......
ஆசறு நல்லநல்ல அவைநல்ல அடியாரவர்க்கு மிகவே”

என்று பாடிப் பாண்டி நாட்டிற்குப் புறப்பட்டார். ஆளுடைய அரசும் அதற்குடன்பட்டுத் தாமும் உடன் புறப்பட, பிள்ளையார் அவர் வருதலைக் கைகுவித்து இறைஞ்சித் தவிர்த்து ஆலவாய்க்குப் போயினார்.

அவர் வந்த பொழுது அமணர்கள், தீக்கனாவும் தீப்புள்ளும் கண்டார்கள். பள்ளி, பாழி, உணவறை, அசோகம் என்ற இவற்றின் மேல்