பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


கூகையோடு ஆந்தை பூசலிட்டு அழிவு சாற்றின. அவர்கள் பீலியும் பாயும் வழுவி வீழ்ந்தன; கால்கள் தடுமாறின; கண்களும் இடத்துத் துடித்தன. தவப் பெண்களும், துறவிகளும் ஒருவரோடு ஒருவர் கலாம் விளைத்து மாறுகொண்டு ஊறுசெய்து தீக்குணம் தலைநின்றார்கள். ஒவ்வோர் ஊரிலும் இவ்வாறு நடக்கவே எல்லோரும் பாண்டியனிடம் சென்று இவற்றை எடுத்தியம்பினர்; அசோகும் முக்குடையும் தலைகீழாக வீழக்கண்ட கனாவையும், குண்டிகையைத் தகர்த்துப் பாயும் பீறி ஓர் குரத்தி ஓடிய கனவையும், சமணருடைய பாழி நின்றும் அறக்கடவுள் கழுதை மேற்படர ஊளையிட்டுப் புலம்பியோடிய கனவையும், சிவனடியார் மதுரைக்குள் புகுந்த கனவையும், ஒரு கன்று, சமணர் கழகந் தன்னை உழறிடச் சிதறியோடி, ஒருவரும் தடுக்க அஞ்சி நிழலிலா மரங்கள் ஏறி நின்றிடக் கண்ட கனவையும் எடுத்துரைத்தனர்; இடர் உழன்று உண்ணாது வருந்தினர். குலச்சிறையார்க்கும் மங்கையர்க்கரசியார்க்கும் நல்ல புட்கள் தோன்றின.

பிள்ளையார் வந்தமை அறிந்து, ஆலவாய் அமர்ந்தானைக் கும்பிடவேண்டும் எனக்கொற்றவனுக்கு அறிவித்து விடைகொண்டு, பிள்ளையாரை எதிர்கொள்ள வந்தனர், மங்கையர்க்கரசியார். பல்லியம் முழங்க, எல்லோரும் களிக்க, அறிவுமணி விளக்காம் பிள்ளையார் வந்து அருளினார். "ஆலவாய் எங்கு?" என்று வினவிச்