பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


சென்று, மங்கையர்க்கரசியார் சைவப் பற்றினையும், குலச் சிறையார் திருத்தொண்டினையும் புகழ்ந்து, அவர் இறைவனை ஏத்தித் தொழுதனர். பின்னே, கோயிலினுள் புகுந்து, நீலமாமிடற்று ஆலவாயிலரனைப் புகழ்ந்து போற்றி, அவர் வெளியேற, மங்கையர்க்கரசியாரும் எதிர்வந்து, மனமுருகி அடி வீழ்ந்து, பானலங்கண்கள் நீர்மல்கப் பவளவாய் குழறி, “யானும் என் பதியும் செய்தவம் என்கொல்?” என்றார். பிள்ளையாரும் "சூழும் ஆகிய பரசமயத்திடைத் தொண்டு வாழும் நீர்மையீர்! உம்மைக் காண வந்தனம்," என்று விடை பகர்ந்தனர். பின்னர்ப் பிள்ளையார் ஒரு திருமடத்தில் இனிது அமர்ந்தார்.

பகல் வரக்கண்ட இருள்போல, இவர் வரவு கண்ட அமணர்கள், ஒன்றாய்க் கூடி மன்னனிடம் ஓடினர்: "சைவன் வந்தமையைக் கண்டதால் யாம் கண்டு முட்டு," என்றனர். “அதனைக் கேட்டதனால் யானும் கேட்டு முட்டு,” என்றான் அரசன். “வழக்கிட வந்தவர் யார்?” என அறிந்து சினந்து "செய்யலாவது என்ன?" என வினவினான். “மடத்தை மந்திரத்தால் தீக்கு இரையாக்குவதே முறை,” என்று அவர்கள் சூழ்ச்சி சொல்ல, அரசனும்,"ஆவதொன்று இதுவேயாகில் அதனையே விரைந்து செய்யப் போங்கள்," என வழி அனுப்பினான்; முகம் புலர்ந்திருந்தான். மங்கையர்க்கரசியார் அது கண்டு, "வென்றவர் பால் சேர்வோம்; இதற்கு ஏன் வருந்த வேண்டும்?" என்று ஆறுதல் கூறினார். குலச்சிறையார்