பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


குலச்சிறையாரும் மங்கையர்க்கரசியாரும் மடம் எரிவது கேட்டு, "நாம் இனி மாய்வதே முறை!" என உறுதி கொள்கையில், அத்தீயடங்கியது கேட்டதும், மனம் மகிழ்ந்தனர். ஆனால், உடனே அரசன் வெப்பு நோயால் வருந்துவது கேட்டு மனம் மாழ்கினர்.

வேந்த னுக்குமெய் விதிர்ப்புற வெதுப்புறு வெம்மை
காந்து வெந்தழற் கனலென மெய்யெலாங் கவர்ந்து
போந்து மாளிகைப் புறத்துநின் றவர்களும் புலர்ந்து
தீந்து போம்படி எழுந்தது விழுந்துடல் திரங்க.

மருத்துவ நூலினர் செய்வன யாவும் அதனை மிகுதியே படுத்தின. அமணர் அது கேட்டு மன்னன் மாட்டணைந்தார். தமது மறை மொழியால் பீலி கொடு தைவர எடுத்தபோது, அவை தீய்ந்து போயின.

குலச்சிறையாரும் மங்கையர்க்கரசியாரும் "இந்த அமணர்கள் நேற்றிரவு செய்த தீங்கே இவ்வாறு வெப்பு நோயாக மூண்டது," என்று கண்டு, அரசனுக்கு அறிவித்தார்கள். அவனும் "பிள்ளையார் வந்தால் இந்த நோய் ஒழிகின்றதா பார்ப்போம். என் பிணியைப் போக்குவாரை யானும் சேர்வேன்," என்று சமணரை நோக்கிக் கூறினான். குலச்சிறையாரும் மங்கையர்க்கரசியாரும் பிள்ளையாரை உடனழைத்து வரப் போயினர். பிள்ளையாரும், அவர்களைக் கண்டு "அமணர் தம்மை வென்று வேந்தனுக்கு வெண் நீறிடுவேன்," என உறுதி கூறிப் பின்னர், "அமணரை நோக்கும் பழுதுடன் நீங்கி வெல்லச்