பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


சேவுயர் கொடியினார் திருவுள்ளம் அறிவேன்” என்று திருவாலவாயினுட் புகுந்தார்; ஆண்டவனைப் பாடி அருள் விடை கொண்டு அரண்மனைக்குப் போயினார். குலச்சிறையார் சென்று அவர் வரவை முன்னாக அரசனுக்கு அறிவித்தனர். அமணர்கள், மன்னவனை நோக்கி, "இதுவோ நம் சமயத்தை நாட்டுமாறு? அவரால் தீர்ந்தது எனினும் யாமுந் தீர்த்தோம் ஆகவும் இசை- வாய்" என்று வேண்டினர். அரசனுக்கு நல்ல நாள் பிறந்ததால், "இரு திறத்தாரும் தீர்மின்; கைதவம் பேச மாட்டேன்," என்று மறுத்தான். பிள்ளையாரும் வந்தார். அவர் வந்திருந்ததைக் கண்டதும் அரசனுக்கு வெம்மை நோய் சிறிது நீங்கியது. அரசன் அவரை "எவ்வூர்" என்று வினவப் "பிரமனூர்" என்ற பதிகம் பாடி விடை அருளினார்.

அமணர்கள் பிள்ளையாரைக் கண்டு, வாய்வழக்கால் வெல்வதனுக்கு எண்ணித் தாம் கோலும் நூல் எடுத்தோதித் தலை திமிர்ப்ப உரைத்தார்கள். மங்கையர்க்கரசியார் அது கண்டு பொறாது, "இவரோசிறுவர்! அவர்களோ பலர்! வெப்பினை முன்நீக்கட்டும்/பின்வாய்வழக்கு ஆடலாம்!" என்றனர். அரசனும் "வேறு ஒரு வழக்கு எதற்கு? என்னுடைய வெப்பு நோயை நீக்கி அவ்வவர்கள் கொள்கையின் சிறப்பை இரு திறத்தாரும் காட்டட்டும்" என்றனன். பிள்ளையார், மங்கையர்க்கரசியாரின் மனம் நடுங்கக் கண்டு “அஞ்சாதீர். அமணருக்கு இளைத்தேன் அலேன்.” என்று பதிகம் பாடி வற்புறுத்தினார்.

6