பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


விளையாடலிலும் கழுவேற்றிய திருவிளையாடலிலும் இக்கதையைக் கூறுகின்றார். திருமறைக்காட்டில் எழுந்தருளியிருந்த சம்பந்தருக்கு மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் திருமுகம் அனுப்பினர்.

"அருண்ஞான சம்பந்தர்க் கடிமை யாற்றா
            வலைமானி குலச்சிறை விண்ணப்ப மின்று
பெரியோராற் றிருவுள்ளப் பெருமை கேட்டேன்.
            பேசரிய திறத்தமணர் தம்மை முற்றும்
விரைவாக எழுந்தருளி வெல்ல வேண்டும்.
            வெண்ணீறும் அஞ்செழுத்தும் விளங்க இங்குப்
பரிவோடும் எழுந்தருளா தொழியின் நாடு
            பறிதலைய ராற்சாலப் பழுதாம் அன்றே."

என்பதே அத்திருமுகம். சம்பந்தர் முன்னதாக எதிரோலை விட்டார்.

கழுமலப் பால னோலை கருணைகூர் மானி யோடு
விழுமிய அமைச்சன் காண்க மேதினி முழுது மெச்சக்
குழுவமண் குண்டர் தம்மைக் கூரிய கழுவிலேற்றி
வழுதிநா ட்டடைய நீறு பரப்பிட வருகின் றேமால்.

ஈதே எதிரோலையில் கண்ட விடை.

சம்பந்தர் வெப்பு நோய் ஒழிக்கத் திருநீறு பூசச் செல்கையில் அமணர்கள் "நீ பகை நாடாகிய சோணாட்டான். அரசனைக் கொல்ல என்ன மருந்து கொணர்ந்து அதனை நீறெனப் பூசுவையோ?" என்று தடுத்தனர் எனப் புதியது மொழிகின்றார், பெரும் பற்றப் புலியூர் நம்பி.

"மண்டழன் மாற்ற வல்லையேல் மாற்று
         மற்றுநின் வழிகளைக் கொண்டே