பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


சோதி வேதியர் துணைசெயு மவரொடும் கூடி,
ஏதம் நீங்கிட விடியுமுன் ஆலயத் தெய்தி,
வேத வேள்விஎன் றெடுத்திசை மேதகு பதிகம்
ஓதும் எல்லைஓம் ஓம்என ஓங்கிய தோர்சொல்.

அனைத்தும் வல்லவன் அருட்டிரு வாக்கெனத் தேறினர் சம்பந்தர்.

கலக வெஞ்சமண் கையரைக் களைந்திடா தொழியி
னிலகு சைவ சித்தாந்தம்முன் இறந்திடும்; இறந்தால்
உலகில் வேதமும் வேள்வியும் அழிந்திடும்; அழிந்தால்,
உலக வேந்தனும் மாரியும் உலகமும் கெடுமால்.

ஐயம் இல்லை என்றனர். அரசனே தீமைக்கும் நன்மைக்கும் உரியான். அவனிடம் சென்று சொல்வோம் எனச்சென்றனர். அவனும் உடன்பட்டான்.

ஐய மில்லென அறைந்திட ஆங்கவர் விரைந்து
வைய மன்னனே வருநலந் தீங்கினுக் குரியான்,
துய்ய காரிய மவன்வயிற் சொல்வமென் றடைந்து
பைய ஓதுமுன் வழுதியும் பழுதிலை என்றான்.

பின்ன மாநெறிச் சமணரைப் பெருந்தண்டஞ் செய்வான்,
கன்னி மன்னவன் இயைந்தது கேட்டலும் கடுகி,
தென்னன் முன்னரின் முன்னையிற் சிறப்பொடும் அடைந்தே,
மன்னு மாசனத் திருந்தனர் வைதிகத் தலைவர்.

என்றபடி அரசன் உடன்படவே முன்னினும் மகிழ்ந்தாராம் சம்பந்தர். அவர்களும் வந்தனர்.

படுவழி நினக்கொ ருக்காற் பலித்தது கொண்டா லித்தாய்,
விடுவிடு காகஞ் செல்லப் பனைக்கனி விழுந்த தொக்கும்,
கடைவழி இதுகொண் டோநீ சாதிக்க வந்தாய் கற்றுப்
புடவியி லெம்மை வெல்வா ரில்லைகாண் புகலுங் காலே.