பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


சாணகம் பூசி யேடா சுட்டிடத் தரியேம் என்பார்,
கோணில் கன்றெடுத்து நீறு தருந்திருக் கோயில் என்பார்,
காணநீ றன்றி வெள்ளை கண்டன அணிவா ராகி,
வீணழிந் தொழிந்த கையர் விலாவொடி யாக்கி னாரால்.

சம்பந்தர் வாதவாரணம் என்ற பேர் பெற்றார்; அவ்விடமே கழுவர் படைவீடு எனப் பெயர் பெற்றது. ஈதே வேம்பத்தூரார் கண்ட கழுவேற்றிய கதை.

வீமநாத பண்டிதர் பாடியகடம்பவன புராணத்தில் உள்ள இலீலா சங்கிரக அத்தியாயத்திலும் இக்கதை சுருக்கமாகக் கூறப்படுகின்றது.

புகலியினில் வைதிக வாரணமென்றியாரும்
           போற்றிய சம்பந்தர் என்றோர் புதல்வர் தோன்றித்
தகவுமையாள் திருமுலைப்பா லமுதம் உண்டு
          தந்தருள் ஞானம்பெற்று மதுரைமேவிப்
பகவனருளால் விட்ட மடத்திலிட்ட படுதழன்
          மாறனுக்கே வித்தணியா வெப்புந்
திகையமணர் காணவொழித் தொழியாக் கூனுக்
          தீரநிமிர்த்தார் புனிதத் திருவெண்ணீற்றால்.

திரண்டமணர் எரியினினிடை எழுதியிட்டால்
         திறல்வேகா ஏடுடையார் வென்றாரென்று
முரண்டருவா துரைத்தேறியழல வன்னி
        முடுகி மிசையேடெவையும் வேவ வேவா
தாண்டருநல்லே டெடுத்தார் தம்மோடின்னும்
        ஆற்றிலிட வாவென்றாற் றிட்டுத் தங்கள்
காண்டரும் ஏடாழி செலக்காழியாரே
       டெதிரேற ஏறினார் கழுவாய் மீது.

என்று பாடுகின்றது. இப்பாடல் கழுவேற்றிய திருவிளையாடலே கூறுகின்றது.