பக்கம்:சரணம் சரணம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

கின்றன. இந்தக் கட்டுரைகளில் குறள் பல இடங்களில், மேற்கோளாக எடுத்தாளப்பெறுகிறது.

அன்னேயின் உருவ அழகையும், கருணையையும், தலே மையையும், வீரத்தையும், திருவிளையாடல்களையும் எடுத் துரைக்கும் நூல்களில் சிறந்து நிற்பது லலிதா சகசிர நாமம் அன்னேயின் திருநாமங்கள் ஆயிரத்தில் அவளு டைய பல்வேறு திறங்களும் அடங்கியிருக்கின்றன. அபிராமிபட்டர் சிறந்த தேவி உபாசகர்; அன்ன்ேயை லலிதா சகசிரநாமத்தால் பலமுறை அருச்சித்து வழிபட்ட வர். ஆகவே அந்தத் திருநாமங்களும் அவற்றின் பொரு ளும் அவர் உள்ளத்தே நின்று நிலவுவது இயல்பே. இந்தப் பாடல்களில் அந்த உணர்வு பலவாறு வெளியாகின்றது. லலிதா சகசிரநாமத்திலுள்ள திருநாமங்கள் பலவற்றை அங்கங்கே மேற்கோளாகக் காட்டியிருக்கிறேன்.

முருகன் திருவருளால் அபிராமி அந்தாதி விளக்கக் கட்டுரைகளின் மூன்றவது பகுதியாகிய இது இப்போது வெளியாகிறது. நான்காவது பகுதியும் வெளி வந்தால் இந்தக் கட்டுரைகள் நிறைவுறும். வடிவேற்பெருமான் அதையும் நிறைவேற்றிக் கொடுப்பான் என்று நம்பு கிறேன்.

இந்தக் கட்டுரைகளைச் சங்கர கிருபாவில் வெளியிட்டு

உதவிய அப்பத்திரிகையின் ஆசிரியருக்கு என் நன்றியறி வைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதன் துணையாசிரிய ராக இருக்கும் வியாகரண சிரோமணி, வேதாந்த வித் வான் பிரம்மறுநீ கே. எஸ். வேங்கடராம சாஸ்திரிகள் இத்தக் கட்டுரைகள் வெளிவருவதில் மிக்க ஆர்வமுடையவர்; நான் தாமதித்தாலும் என்னேத் தூண்டி எழுதும்படி செய்கிறவர். அவருக்கும் என்னுடைய நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்:

‘காந்தமலேசி, - கி. - e e. 8 - 5 - 75 } வா. ஜகந்நாதன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/10&oldid=680471" இலிருந்து மீள்விக்கப்பட்டது