பக்கம்:சரணம் சரணம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 சரணம் சரணம்

இருக்கச் செய்யும் பேராற்றலை உதவுவாள் என்பதை, அவள் கையில் ஏந்திய கரும்பும் மலரும் காட்டுகின்றன. ஒரு குழந்தை தன்னுடைய தாயையும், தந்தையையும் ஒருங்கே பார்த்து மனத்தில் சிறிதும் தயக்கமின்றித். தியானம் செய்வது போன்ற எண்ணத்துடன் இந்தப் பாடலேத் தொடங்குகின்றர். .

அம்பிகையின் திருக்கையிலுள்ள கரும்பின் தன்மை யையும், மலரின் தன்மையையும் முன்பே பலமுறை நாம்: பார்த்தோம்.

கோகனகச்

செங்கைக்கரும்பும்மலரும்எப்போதும்என் சிந்தையதே. அம்பிகையின் திருக்கரங்களே தாமரை மலர்போல் இருக்கின்றன. அத்தகைய கரங்களில் கரும்பும், மலர் களும் இருக்கின்றன. அந்த இரண்டும் இனிமையை உடையன. கரும்பு வாய்க்குச் சுவை தருவது. மலர் நாசிக்கு மணம் தருவது. அந்த இரண்டையும் எண்ணு பவர்கள் உள்ளம் இனிமை பெற்று என்றும் அவற்ற்ை. எண்ணிக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. -

தங்கச் சிலைகொண்டு தானவர்

முப்புரம் சாய்த்துமத - வெங்கட் கரிஉரி போர்த்தசெஞ்

சேவகன் மெய்அடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட - நாயகி கோகனகச் செங்கைக் க்ரும்பும் மலரும்எப்

போதும்என் சிந்தையதே.

(மேரு மல்யர்கிய பொன் வில்லைக் கையில் ஏற்றுக் கொண்டு, அசுர்ர்க்ளுக்குரிய மூன்று புரங்களையும் அழித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/102&oldid=680474" இலிருந்து மீள்விக்கப்பட்டது