பக்கம்:சரணம் சரணம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாறையில் அடித்த முளை

பாரத நாட்டில் உள்ள பெரியவர்கள் வேதத்தையே தம்முடைய ஆதார நூலாகக் கொண்டு வாழ்ந்தனர். “இறைவன் ஒருவனே. ஆயினும் அவன் அவ்வப்பொழுது வெவ்வேறு வடிவத்தில் தோன்றிப் பக்தர்களுக்கு அருள் புரிவான்’ என்பதே அவர்களுடைய நம்பிக்கை. இந்தக் கருத்தை வெவ்வேறு மூர்த்திகளே வழிபடும் அன்பர்கள் வெவ்வேறு வகையில் சொல்வார்கள். வானத்திலிருந்து விழும் மழை நீர் கடைசியில் கடலேச் சேருவதுபோல எல்லாத் தெய்வங்களின் வழிபாடுகளும் இறுதியில் கேச வனேயே அடைகின்றன’ என்பர் ைவ ன வ ர்க ள். “யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே, மாதொரு பாக ர்ைதாம் வருகுவர்?’ என்பர் சைவர்.

‘பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம் புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கிக் கங்குகரை காணுத கடலே??

என்று பாடுவார் இராமலிங்க சுவாமிகள்.

இப்போது முறையாக உள்ள சமயங்களிலுள் என கருத்துக்களே ஆராயும் பொறுமை இன்மையாலும், ஒரு சமயத்தை நிறுவினேம் என்ற சிறப்பை அவாவியும் புதிய சமயத்தைச் சிலர் நிறுவலாம். அப்படி நிறுவிலுைம் அதையும் இறைவன் ஏற்றுக் கொள்வாளும். இவ்வாறு: திருநாவுக்கரசர் பாடுகிறார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/104&oldid=680476" இலிருந்து மீள்விக்கப்பட்டது