பக்கம்:சரணம் சரணம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் அன்னே 103

படுவார்கள். அவர்களுக்கு ஞானத்தில் நோக்கம் இல்லை. தாம் மேற்கொண்ட செயல்களில் வெற்றிபெறவேண்டும்; அவ்வளவுதான். தெய்வத்தை வழிபடுவது எதற்காக, நாம் பிறவி எடுத்தது எதற்காக என்பவை போன்ற கேள்விகளே அவர்கள் உள்ளத்தில் எழுவதில்லே. அதிகாரி ஒருவரைத் திருப்திப்படுத்தத் தம்மிடமுள்ள பொருள் களைக் கொடுத்து வழிபட்டுக் காரிய்த்தைச் சாதித்துக் கொள்பவர்களேப்போலவே அவர்கள் இருப்பார்கள், தாம் வழிபடும் தெய்வங்களுக்குப் பலி கொடுப்பார்கள்; கள்ளும் வைத்து வழிபடுவார்கள்.

விலங்கைக் கோயில்களில் பலியிடக்கூடாது என்ற சட்டம் வருவதற்குமுன் சிற்றுரர்களில் உள்ள கிராம தேவதைகளுக்கு ஆடு, கோழி முதலியவற்றைப் பலியிட்டு வந்தார்கள். அங்கே வழிபடுகிறவர்கள் தாமஸ் குண மூடையவர்கள். தெய்வத்தின் திருவருளால் ஞானம் பெற்றுப் பேரின்ப வாழ்வு பெறலாம் என்ற நினேவே அவர்களுக்கு இருப்பதில்லே.

சத்துவகுணம் மிக்க நந்தனர், சேரியில் பிறந்தவராணு லும் அவருடைய இயல்பு அங்குள்ள மற்றவர்களுடை வயதைப் போல இல்லே. அவர்கள் மாடனேயும் காட்டேறி யையும் வழிபட்டார்கள்; புலால் உண்டு மகிழ்ந்தார்கள்; கள்ளைக் குடித்துக் கூத்தாடினர்கள்; தாங்கள் உண்ப வற்றைத் தங்கள் தெய்வங்களுக்குப் படைத்துப் பூசை போட்டார்கள். அவர்களுடைய பழக்கவழக்கங்களில் அருவருப்புற்ற நந்தனர் நடராசப்பெருமானிடம் பக்தி கொண்டார். “நாளேக்குச் சிதம்பரம் போவேன் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் முறுகியது. அதனுல் அவ ருக்கு, நாளேப் போவார் என்ற பெயர் நிலேத்தது.

உலகில் பிறந்ததன் பயன் இனிப் பிறவாமல் இருப்பது என்ற எண்ணம் உள்ளவர்கள், அதற்கு உறுதுணையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/113&oldid=680486" இலிருந்து மீள்விக்கப்பட்டது