பக்கம்:சரணம் சரணம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் அன்னே 1 (J9

செங்கேழ் அடுத்த சினவடி வேலும் திருமுகமும் பங்கே நிறைந்தநற் பன்னிரு

தோளும் பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும்செங் கோடைக் குமரனென எங்கே நினைக்கினும் அங்கேவந்

தென்முன் எதிர்நிற்பனே?

- (கந்தர் அலங்காரம்)

என்று சிறந்த அநுபூதிமானகிய அருணகிரி நாதர் பாடு கிறார், அபிராமி பட்டரே வேருே.ரிடத்தில்,

பார்க்கும் திசைதொறும் பாசாங் குசமும் பணிச்சிறைவண் டார்க்கும் புதுமலர் ஐந்தும்

கரும்பும்என் அல்லல்எல்லாம் தீர்க்கும் திரிபுரை யாள்திரு

மேனியும் சிற்றிடையும் வார்க்குங் குமமுலே யும்முலே

மேல்முத்து மாலேயுமே? (85)

என்று பாடுகிரு.ர்.

இங்கே வேறு ஒரு வகையில் அதைச் சொல்கிறார், எங்கே பார்த்தாலும் அம்பிகையின் தேசுடைய திரு மேனியே தோன்றுகிறதாம், திசைகளைப் பார்த்தாலும் வானத்தைப் பார்த்தாலும் நிலத்தைப் பார்த்தாலும் திருமேனிப் பிரகாசமே காண்கிறது. கண்ணிலும் கருத்தி லும் அன்னையின் வடிவத்தைப் பதித்திருப்பவருக்கு அதுவே எங்கும் தோன்றுகிறது.

திருமேனி ப்ரகாசம் அன்றிக் -

காணேன், இருநிலமும், திசை நான்கும், ககனமுமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/119&oldid=680492" இலிருந்து மீள்விக்கப்பட்டது