பக்கம்:சரணம் சரணம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலையும் மலரும்

அன்பர்களுக்குத் தாம் வழிபடும் தெய்வங்களைப் பற்றி எவ்வளவு சொன்னலும் திருப்தி உண்டாவதில்லே. இறைவனுடைய புகழுக்கு எல்லே இல்லே. ஆதலால் புகழ்ந்து முழுமையும் சொல்லிவிட்டேன் என்று யாரா லும் சொல்ல முடியாது. நெடுந் தூரமான ஒரிடத்துக்குப் போகிறவன் நடந்து நடந்து அலுத்துப் போகும் சமயம் வரும். ஆனல் வழிநெடுக உள்ள காட்சிகளும் சோலைகளும் இன்பத்தை அளிப்பனவாக இருந்தால் வழி நடையின் சிரமம் தெரியாது. இந்த வழி எப்போது முடியப்போகிறது. என்ற எண்ணமே தோன்றாது. அவ்வாறே இறைவனைப் புகழ்வதனால் வேறொரு பயன் உண்டு என்று எண்ணுபவர் களுக்குத்தான் புகழுவதன் அளவைப் பார்க்கத் தோன் றும். புகழ்வதிலேயே இன்பம் காணுகிறவர்களுக்குப் புகழ் எவ்வளவு நீண்டாலும் சலிப்புத் தட்டாது; புகழுக்கு, எல்லே இல்லேயே என்று புகழை நிறுத்தமாட்டார்கள்;. புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். அது எல்லே இல்லாமல் நீள நீள அவர்களுடைய இன்பமும் நீண்டுகொண்டே போகும்.

அபிராமிபட்டர் அன்னையின் புகழைப் பாடுவதில்: இன்பம் காணுபவர். தாம் புகழ்வதால் அந்தப் பெரு மாட்டிக்குத் தனிச் சிறப்பு உண்டாகும் என்ற எண்ணம் சிறிதளவும் அவருக்கு இல்லை. அதற்கு நேர் மாருகத் தாம். பாடும் பாடல்களில் உள்ள சொற்கள் யாவுமே பயன் இல்லாதன, பொருள் அற்றன என்று நினைக்கும் அடக்கம் உடையவர். ஆலுைம் அவர் பாடுவதை நிறுத்தவில்லை. பயன் இல்லாத ஒரு காரியத்தைச் செய்யலாமா? தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/128&oldid=680502" இலிருந்து மீள்விக்கப்பட்டது