பக்கம்:சரணம் சரணம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலேயும் மலரும் 128

அன்னையின் திருவடிப்பல்லவத்தைப் பற்றிக்கொண்டு அன்பினல் அவர் பாடினர். தம் சொற்கள் அவமானவை, பயனற்றவை என்று அவர் உணர்கிறார். பின் ஏன் பாடு கிறார்?

அம்பிகையின் புகழைப் பாட வந்த அன்பர் அவளு டைய திருநாமத்தை இடையிடையே வைத்துப் பாடியிருக் கிறார். அந்தத் திருநாமங்கள் இவராக உண்டாக்கினவை அல்லவே? மற்றச் சொற்கள் பயன் இல்லாமல் இருந் தாலும் அந்தத் திருநாமங்கள் பொருளும் பயனும் உடையன அல்லவா?

“நான் அன்னையைப் புகழ்ந்து துதிப்பதாக எண்ணிப் பாடின்ேன். நான் கற்பனையால் பாடினவையும் வருண&ன யாக அமைத்தவையும் பயன் இல்லாத வீண் வார்த்தை களே. ஆலுைம் நடுநடுவே அம்பிகையின் நாமங்கண் வைத்திருப்பதல்ை அவற்றையாவது தோத்திரம் என்று சொல்லத்தானே வேண்டும்? இந்தச் சிறிய ஆறுதல் எனக்கு இருக்கிறது’ என்கிறர் இவ்வாசிரியர்.

வினையேன் தொடுத்த - சொல் அவமாயினும் நின் திருநாமங்கள்

தோத்திரமே.

“நான் தீவினையை உடையவன். ஆதலால் என்னிடத் தில் நல்லது தோன்றது. ஏதோ ஆசையால் மாலே தொடுப் பதைப் போலச் சொற்களேத் தொடுத்தேன். பயன் இல் லாத இலேகளைத் தொடுத்ததுபோலத் தொடுத்து விட் டேன்; அவற்றில் மணமும் இல்லை; வண்ணமும் இல்லை; பசுமையும் இல்லே. ஆல்ை இடையிடையே உன்னுடைய திருநாமங்களாகிய மலர்களே வைத்துத் தொடுத்திருக் கிறேன். ஆகையால் இது ஒரு வகையில் மாலே என்று சொல்ல வழியுண்டு. இந்த மலர்களுக்குள்ள கெளரவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/133&oldid=680508" இலிருந்து மீள்விக்கப்பட்டது