பக்கம்:சரணம் சரணம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ? சரணம் சாணம்

போகாதே! மலரோடு மலர் இருந்தால்தான் மலராக இருக்கும் என்ற வறையரையுண்டா? மலர் இலேயோடு சேர்ந்தால் இலேயாக மாறிவிடும் என்று சொல்லலாமா? இலயோடு சேர்ந்தாலும் மலர் மலர்தான். ஆதலால் நான் பாடியது துதியாகாவிட்டாலும் உன் நாமங்களாவது தோத்திரமாக விளங்கும் அல்லவா?’ என்று கேட்கிரு.ர்.

இறைவியின் திருவடிப்பற்று உள்ளத்திலும் அவள் திருநாமங்கள் நாவிலும் இருப்பதனுல் இந்தப் பாடல்கள் சிறந்த பக்தி மணமுடைய மாலே ஆயின. இவர் தம்மை இழித்துக்கொண்டு பேசும் பேச்சிலிருந்தே இந்தத் தகுதி இவருக்கு உண்டு என்பதை நாம் உணர்ந்து கொள் கிருேம்,

வல்லபம் ஒன்றறியேன்சிறி

யேன் நின் மலரடிச்செம் பல்லவம் அல்லது பற்றாென்று

இலேன்; பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்

பாய், வினை யேன்தொடுத்த சொல்அவம் ஆயினும் நின்திரு

நாமங்கள் தோத்திரமே.

(பசும்பொன் மலேயாகிய மேருவை வில்லாகப் பிடித்த சிவபெருமானுடன் கவலேயின்றி எழுந்தருளியிருக்கும் தேவி, எந்த வகையான ஆற்றலேயும் அடியேன் அறிய மாட்டேன். சிற்றறிவும் சிறிய ஆற்றலும் உடைய யான் எங்கும் பரந்துநிற்கும் நின் திருவடியாகிய செம்மையாகிய தளிரை யல்லாமல் வேறு ஒரு பற்றும் இல்லாதவன். தீவினையையுடைய யான் அந்தாதியாகத் தொடுத்த சொற்கள் பொருள் இல்லாத வீண் சொற்களாயினும், இடையிடையே வைத்த நின் திருநாமங்கள் தோத்திரமே ஆகும். (ஆதலின் இதலுைம் பயன் உண்டு.) . 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/134&oldid=680509" இலிருந்து மீள்விக்கப்பட்டது