பக்கம்:சரணம் சரணம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலையும் மலரும் 125

வல்லபம்-ஆற்றல். ஒன்றும் அறியேன் என்ற உம்மை தொக்கது. மலர் அடி-மலர்ந்த அடி; வினைத்தொகை. பின்னே பல்லவம் என்று கூறலின் இங்கே மலர் போன்ற அடி என்று கொள்ளுதல் சிறப்பன்று. பசும்பொன்-கலப் பில்லாத பொன். பொருப்பு:மலே. வீற்றிருத்தல்.கவலே யின்றி இருத்தல்; தனிச் சிறப்புடன் அமர்ந்திருத்தல் என்றும் கூறலாம்.

வல்லபம் அறியேன், சிறியேன், வினேயேன் என்று மூன்று வகையில் தம்மை இழித்துக்கொள்கிறார். தொடுத்த சொல் என்பதல்ை பாடலாக அமைத்த சொற்கள் என்று கொள்ளவேண்டும். தொடுத்தலால் பாடலுக்குத் தொடை என்ற பெயர் வந்தது.)

இறைவியின் திருநாமங்களே எந்த வகையில் சொன் லுைம் பயன் உண்டு என்பது கருத்து.

இது அபிராமி அந்தாதியின் 66-ஆம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/135&oldid=680510" இலிருந்து மீள்விக்கப்பட்டது