பக்கம்:சரணம் சரணம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 சரணம் சரணே

அநுபவிக்கிருேம். இந்த அநுபவத்துக்குக் காரணமாக நிற்பது விதி. இந்த விதியின்படியே இன்ப துன்பங்கள் அமைகின்றன. விதியின் படி விளைவை உண்டாக்கும் அதி காரியாக இருக்கிறவன் கடவுள். .

வகுத்தான் வகுத்த வகையல்லால், கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது??

என்ற குறள், விதியையும் அதன் விகாவை ஆத்மாக் களுக்கு ஊட்டும் கடவுளேயும் பற்றிச் சொல்கிறது.

ஒருவன் எப்பொழுதும் நல்ல செயல்களேயே செய். கிருன்; இறைவனிடம் மிக்க பக்தியுடன் இருக்கிருன். அவனுக்குக் துன்பத்துக்குமேல் துன்பங்களாக வருகின்றன. அவன் நிலயைக் கண்டு நாம் வருந்துகிருேம். இவ்வளவு: நல்லவனுக்கு இப்படியெல்லாம் வரக்கூடாது. கடவுளுக் குக் கண் இல்லையோ? என்று இரங்குகிருேம். -

வேறு ஒருவன் மிகவும் கொடியவன்; தீய வழிகளில் பணம் சேர்க்கிருன்; பலருக்குக் கொடுமை புரிகிறன். அவன் வளவாழ்வு பெற்று வாழ்கிறன். பங்களா என்ன, கார் என்ன, இப்படி எல்லாச் செளகரியங்களும் உடைய வகை விளங்குகிருன். அவனப் பார்க்கும்போது நமக்கு, வயிறு எரிகிறது. இந்த அக்கிரமக்காரன் இப்படி வாழ், கிருனே! நல்லதுக்குக் காலம் இல்லை. கடவுளுக்குக் கண் இல்லை என்று அப்போதும் சொல்கிருேம். 3

அவர்கள் என் இப்படி முரண்பாடான நிலையில் இருக்கிறர்கள்? இப்போது அவர்கள் செய்யும் செயல்களை எடை போட்டுப் பார்க்கிருேம். அந்தச் செயல்களுக்கு, இப்போதே விளைவு உண்டாகவில்லையே என்று அங்கலாய்க் கிருேம். இப்போது அவர்கள் படும் இன்ப துன்பங்களுக்குக் காரணம் அவர்கள் முன் பிறவியில் செய்த நன்மை தீமை: களே. அவை இப்போது நமக்குத் தெரிவதில்லே. இப்போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/138&oldid=680513" இலிருந்து மீள்விக்கப்பட்டது