பக்கம்:சரணம் சரணம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 f 37

இந்தக் கருத்தை அபிராமி அந்தாதியில் சொல்கிருச் அருளாளராகிய அபிராமிபட்டர்.

தோத்திரம் செய்து தொழுது, மின்

போலும்நின் தோற்றம்.ஒரு மாத்திரைப் போதும் மனத்தில்வை

யாதவர், வண் மைகுலம் கோத்திரம் கல்வி குணம்குன்றி

நாளும் குடில்கள்தொறும் பாத்திரம் கொண்டு பலிக்குஉழ

லா நிற்பர் பார்எங்குமே,

(தேவி, நின்னே வாயால் துதி செய்து, கையால் தொழுது, மின்னலைப் போலச் சுடர்விடும் நின் திருமேனித் தோற்றத்தை ஒரு கணப் போதாவது மனத்தில் இருத்தித் தியானம் செய்யாதவர், கொடைத் தன்மை, குடிப் பிறப்பு, கோத்திரம், கல்வி, நல்ல குணம் முதலியவற்றில் குறைபாடு உடையவராகி, உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு குடிசை தோறும் பிச்சைக்காகத் திரிவார்கள்.

ஒரு மாத்திரைப்போது-இமையை இமைக்கும்நேரம், வண்மை-கொடுக்கும் இயல்பு. குலம்-ஒழுக்கமுடைய குடிப்பிறப்பு. கோத்திரம்-பெரியவர்கள் வழிவருதல், குடில்கள்-குடிசைகள், பலிக்கு-பிச்சைக்கு.)

தொழுது என்று கையில்ை தொழுவதைச் சொன் லுைம் உபலட்சணத்தால் தலையில்ை வணங்குவது, காலால் வலம் செய்வது, உடம்பினுல் நிலத்தில் பணிந்து வணங்குவது முதலிய உடம்போடு தொடர்புடைய எல்லா வற்றையும் கொள்ளவேண்டும்.

அம்பிகை மின் போலும் தோற்றமுடையவள் என்பதை, ‘மலர்க்கமலே துதிக்கின்ற மின்கொடி’ (1).

ச-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/147&oldid=680523" இலிருந்து மீள்விக்கப்பட்டது