பக்கம்:சரணம் சரணம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தும் விளேவும்

வாங்கமுடியாது; ஏதாவது பாத்திரத்தை ஏந்திக்கொண்டு செல்வார்கள். அவர்கள் நிலேயும் இரங்குவதற்குரியது.

சிலர் ஒரே ஊரில் வாழ்ந்து ஏதோ சில இடத்தில் பிச்சையெடுப்பார்கள். ஏதாவது கிடைக்கும். அதோடு நிற்கலாம். சிலருக்குப் போன இடத்தில் சரியானபடி கிடைக்காது. ஊர் ஊராகப் போவார்கள்; நாடு நாடாகத் திரிவார்கள். இது பெரிய அவல நிலே.

அம்பிகையை வணங்காதவர்கள் அடுத்த பிறவியில் இந்த நான்கு விதமான பரிதாப நிலைகளிலும் இருப்பார் களாம். அன்றன்று பிச்சை வாங்கி வயிறுவளர்க்கவேண்டி வரும். அழுக்குடையும் மெலிந்த உடம்பும் இருப்பதல்ை குடிசைகளுக்குப் போய்த்தான் பிச்சை வாங்கவேண்டும். நோயாளியாக இருப்பதல்ை கையால் வாங்க முடியாமல் பாத்திரத்தில் வாங்க வேண்டியிருக்கும். போன இடத்தில் வேண்டிய அளவு கிடைக்காமல் ஊர் ஊராகச் சுற்றுவார் கள். இந்தக் குறிப்பையெல்லாம்,

நாளும் குடில்கள்தொறும் பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே

என்ற சொற்கள் புலப்படுத்துகின்றன.

இறைவனே வணங்காதவர்கள் வறுமையால் உழல் வதைப் பின்வரும் பழம்பாட்டும் சொல்கிறது.

கரவோடு நின்றார் கடிமனேயில் கையேற்று இரவோடு நிற்பித்தது எம்மை-அரவோடு மோட்டாமை பூண்ட முதல்வனே முன்வணங்க மாட்டாமை பூண்ட மனம், !

இரந்து வாழும் நிலையில் உள்ள ஒருவன் தனக்கு இந்த திலே உண்டாகியதற்குக் காரணம், போன பிறவிவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/149&oldid=680525" இலிருந்து மீள்விக்கப்பட்டது