பக்கம்:சரணம் சரணம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவம் புரிந்தவர்களின் அடையாளங்கள்

உலகத்தில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகளா -கவே இருக்கிரு.ர்கள். செல்வர்கள் குறைவாகவே இருக் கிறார்கள். அப்படியே நல்லவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். பொல்லாதவர்களே மலிந்துள்ளனர். நல்ல நெறியில் வாழ்வதற்கு முயற்சி செய்கிறவர்கள் லட்சத்தில் ஒருவர் இருப்பார்களோ, இல்லையோ தெரியாது. ஏன் இப்படி இருக்கிறர்கள்? செல்வர்களுக்கும் நல்லவர்களுக் கும் ஏதேனும் தொடர்பு உண்டா? உண்டு என்று

திருவள்ளுவர் சொல்கிரு.ர்.

இப்போது செல்வர்களாக வாழ்கிறவர்களில் சிலர் தம்முடைய சொந்த முயற்சியில்ை அந்தச் செல்வத்தை அடைந்தவர்களென்று தோன்றும். பல செல்வர்கள் திடீ ரென்று செல்வத்தை அடைகிறர்கள். செல்வர்களுடைய பிள்ளேயாகப் பிறப்பதல்ை செல்வராக விளங்குகிறவர்கள் .சிலர். முயற்சி செய்து சொந்த உழைப்பினுல் சிலருக்குப் பொருள் சேர்ந்தது என்று சொல்கிருேம். உழைக்கிறவர் -கள் எல்லோருக்குமே பொருள் சேர்கிறதா? இல்லையே! ஒரே -சமயத்தில் இரண்டு பேர் அடுத்தடுத்துக் கடை வைத்திருக் கிறார்கள். ஒருவருக்கு நல்ல வியாபாரம் நடந்து செல்வம் சேர்கிறது. மற்றவருக்கு நஷ்டமே உண்டாகிறது. இப்படி அமைவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? அதைத்

தான் திருவள்ளுவர் சொல்கிறார்,

இப்போது நாம் படும் இன்பதுன்பங்கள் சென்ற பிறவி அயில் நாம் செய்த புண்ணிய பாவங்களின் விளைவு. இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/16&oldid=680537" இலிருந்து மீள்விக்கப்பட்டது