பக்கம்:சரணம் சரணம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சரணம் சரணம்

என்பவர்களுக்கே செல்வத்தைத் தரும்; கல்வியை அளிக் கும்; ஒரு நாளும் தளர்வை அறியாத நெஞ்சத்தை உண் உாக்கும்; தெய்வத் தேசு நிரம்பிய வடிவத்தையும் அருளும்; மனத்தில் வஞ்சகம் இல்லாத நல்லவர்களின் கூட்டத்தைத் தரும்; நல்லனவாகிய எல்லாவற்றையுமே. வழங்கும்.

கடைக் கண்கள்: ஆ கு .ெ ப ய ர்; பார்வையைக் குறித்தது.)

நல்லன எல்லாம் தரும் என்பதில் சொர்க்க போக, மும், முக்தியும் அடங்கும். இந்த உலகத்தில் இன்ப வாழ்வு வாழ்வதற்கு எவையெவை வேண்டுமோ அவற்றை எல்லாம் தருவதோடு அமையாமல், மறுமை வாழ்வில் தேவலோக இன்பத்தையும், அப்பால் மோட்ச சாம்ராஜ் யத்தையும் அம்பிகை அருளுவாள் என்பதைக் குறிப்பாகச் சொன்ன ர்.

இந்தப் பாடல் ஒரு வகையில் அபிராமி அந்தாதியின் பயனாக நின்று நிலவுகிறது. பெரும்பாலும் பல நூல்களில் அந்த நூலேப் பாராயணம் செய்வதல்ை உண்டாகும் பயனேக் கடைசியில் சொல்லியிருப்பார்கள். இந்த நூவி லும் கடைசியில் அப்படி ஒரு பாடல் வருகிறது. ஆனல் அந்தப் பாடலேவிட இந்தப் பாடல்தான் பயனே விரித்துக் சொல்கிறது. நூலுக்கு நடுவில் அமைந்த இது பழத்திற்கு, நடுவிலுள்ள விதைபோல, சத்துள்ளதாக, பயனேச் சொல் வதாக, அமைந்திருக்கிறது. " - -

இது அபிாரமி அந்தாதியின் 69ஆவது பாடல். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/166&oldid=680544" இலிருந்து மீள்விக்கப்பட்டது