பக்கம்:சரணம் சரணம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன குறை? I69

எம்பெருமாட்டி எழுந்தருளியிருக்கும் திருமாளிகைக் குச் சிந்தாமணிக் கிருகம் என்று பெயர், அந்தத் திருமாளி கைக்கு நான்கு திருவாயில்கள். அந்த நான்கு வாயில்களி லூம் படிகளாக விளங்குபவை வேதங்கள். அம்பிகையை அறிவதற்கு அந்தப் படிகளேத் தாண்டிப் போகவேண்டும். அம்பிகை அடியார்களுக்கு அருள் செய்ய வெளிப்படும் பொழுது அந்தப் படிகளில் இறங்கி வருவாள். மறுபடியும் அவற்றில் ஏறி உள்ளே புகுவாள். இப்படி அந்தப்படிகளில் ஏறி இறங்கிப் பழகுவதல்ை அவள் திருவடித் தாமரைகள் பின்னும் சிவந்து அழகு மிகுந்து தோன்றும்.

அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள்.

‘அத்தகைய பெருமாட்டி நமக்கு அருள் செய்யக் கிடைந்திருக்கும்போது அறிவில்ை குறை வரக் காரணம் இல்லையே! உனக்கு என்ன குறை? நெஞ்சமே!’

அருமறைகள்

பழகிச் சிவந்த பதாம்புயத்தாள்

...இருக்க - r

...நெஞ்சே.உனக்கு என் குறையே?

அம்பிகையின் வடிவழகு முழுவதையும் எண்ணி,

  • அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி’ என்றார். அந்தப் பிழம்பாகிய அழகை லாவண்யம் என்று வடமொழியிலும் வனப்பு என்று தமிழிலும் சொல்வார்கள். அது திருமேனி முழுவதும் பரவியிருக்கும் பேரழகு. அபிராமி என்ற திருநாமமே அவளுடைய பேரழகை எண்ணி அமைந்தது. தானே?

இவ்வாறு திருமேனி முழுவதும் பரவிய வனப்பை எண்ணிய பட்டர், அவள் அங்கங்களைச் சொல்ல வந்தார். முதலில் திருவடியைச் சொன்னர். அது அம்புயம் போன்றது. செவ்வண்ணத்தாலும், மென்மையிலுைம், அருள்தேன் பில்குவதலுைம், தாபத்தை நீக்கும் தண்மை

ச1ை2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/179&oldid=680558" இலிருந்து மீள்விக்கப்பட்டது