பக்கம்:சரணம் சரணம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சரணம் சரணம்

இருப்பது கருதி. கொம்பு என்றது. பல மலர்கள் பூத்த கொம்பு என்றபடி, அம்பிகையின் திருவடி, திருவதனாம், திருக்கரங்கள். திருவிழிகள், திருவுந்தி முதலியவை பல வகை மலர்களே ஒத்திருப்பதல்ை கொம்பு என்றார், தாஆளப் பார்த்தபோது அம்புயமாக இருந்தது. முடிவரையில் பார்த்தபோது பல மலர்கள் பூத்த கொம்புபோல இருப்ப தல்ை, திருமுடிக் கோமள யாமளேக் கொம்பு’ என்றார்.

‘இணேயில்லாத பூர்ண லாவண்யமும் வேதங்களில் பழகிய திருவடித் தாமரையும் சந்திரனத் தரித்த திரு முடியும் உடைய யாமளே இருக்க, உனக்கு ஏதுகுறை??? என்று கேட்கிறார் இவர்,

அழகே இன்றி மாயையால் வெறிச்சோடிக் கிடக்கும் பிரபஞ்சத்தைக் கண்டு பயப்பட்டுக் கவலேப்பட வேண் டாம்; அழகில் இணையற்றவளே உள்ளே பார்க்கலாம்: நாம் மிகத் தாழ்ந்திருக்கிருேமே என்ற கவலேயே வேண் டாம், வேதத்தில் பழகும் தாமரை அடி நமக்குப் பற்றாக இருக்கிறது. அதைப் பற்றிக்கொண்டால் அவள் குழவிப் பிறையைத் தூக்கி வைத்துக் கொண்டதுபோல நம்மை யும் உன்னதமான இடத்தில் வைப்பாள். அப்படி இருக்க ஏன் வருந்த வேண்டும்?’ என்கிறர்.

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி,

அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத் தாள், பனி

மாமதியின் - குழவித் திருமுடிக் கோமள யாமளேக்

கொம்புஇருக்க, இழவுஉற்று நின்றநெஞ்சே! இரங்கேல்;உனக்கு

என்குறையே? - :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/182&oldid=680562" இலிருந்து மீள்விக்கப்பட்டது