பக்கம்:சரணம் சரணம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சரணம் சரணம்

பூர்ணத்துக்குக் குறைவுவராது. அவளேச் சார்ந்த ஆன்மா வும் பூர்ணத்தை அடைகிறது.

குணங்களிலும் சிறந்தவள் அன்னே. அனந்த கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் அவள். குண நிதி (லலிதா.604), என்பது தேவியின் திருநாமங்களில் ஒன்று.

ஏதேனும் ஒரு பொருளால் குறையுடையவன் அந்தப் பொருள் யாரிடம் மிகுதியாக இருக்கிறதோ அவனே அடைந்து யாசிக்கிருன். நூறு ரூபாய் சம்பளமுடையவன் தனக்குப் பத்து ரூபாய் கடன் வேண்டுமென்றால் இருநூறு ரூபாய்ச் சம்பளக்காரனப் போய் நாடி யாசிக்கிருன். அவன் இவனுக்குப் பத்துருபாய் கவுரவத்தை முன்னிட்டுக் கொடுக்கிறன். ஆனால், அவன் நானூறு ரூபாய்ச் சம்பளக் காான நாடுகிறன். இப்படியே ஒவ்வொருவனும் தனக்கு மேல்நிலையில் உள்ளவனே நாடித் தன் குறையைப் போக்கிக் கொள்ள முயல்கிருன். யாரும் குறையே இல்லர் மல், யாரையும் நாடவேண்டிய அவசியம் இன்றி இருப்ப தாகத் தோன்றவில்லை. சிறுகுறையுடையவர்கள் நாடும் மக்கள். முன்னவர்களைவிடப் பெருங்குறையுடையவர்கள்ா கவே இருக்கிறார்கள். ஆகையால் குறையை அடியோடு, நீக்கிக் குறையேயின்றி இருப்பவர்கள்.யாரும் இல்லே -

குறைவிலாநிறைவர்க இருக்கும் அம்பிகையே எல்லோ ருடைய குறைகளையும் நீக்க வல்லவள். சிறிய குறைகளே நீக்கும் ஆற்றல் சில மனிதர்களிடம் இருக்கிறது. ஆனல் எல்லாவகையான குறைகளேயும் போக்கும் ஆற்றல் யாரி உமும்இல்லை. நோயைப்போக்கும் ஆற்றல் மருத்துவரிடம் இருக்கிறது. ஆல்ை அந்த மருத்துவரிடம் செல்லும் நோயா ளிகள் யாவரும் நோய் நீங்கிச் சுகம் பெறுவதில்லை. வறிய வர்களுக்குப் பொருள் வழங்கும்:வள்ளல்கள் இருக்கிறர்கள். ஆல்ைஅவர்கள் வறுமை அடியோடுஒழியும்படி வழங்குவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/186&oldid=680566" இலிருந்து மீள்விக்கப்பட்டது