பக்கம்:சரணம் சரணம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் எழுதிய உருவம்

அன்பர்கள் தாம் போற்றும் தெய்வத்தை மூன்று கரணங்களாலும் வழிபட்டு இன்புறுவார்கள். மூர்த்தி யைக் கண்ணுல் கண்டும், தலேயால் வணங்கியும், கையால் அர்ச்சனை செய்தும் காயம் என்னும் கரணத்தை ஈடு படுத்துவார்கள் ; வாக்கில்ை அம் மூர்த்தியின் திருநாமங் களேயும் புகழையும் சொல்லிச் சொல்லி இன்புறுவார்கள்; மனத்தில்ை தியானிப்பார்கள். -

இவற்றில் உடம்பினுல் செய்யும் செயல்கள் எளி யவை, இறைவன் கோயிலுக்கு யாரும் சென்று வலம் வரலாம். கண்ணில்ை இறைவனேக்காணலாம். கையால் தொழலாம். கீழே விழுந்து வணங்கலாம். இவை ஓரளவு முயற்சி செய்தால் நடக்கக்கூடிய காரியங்கள்.

அவனுடைய நாமத்தைச் சொல்வது அவற்றைவிடச் சற்றுக் கூடுதலான முயற்சியில்ை அமைவது. இறைவன் நாமத்தைத் தெரிந்துகொண்டு அதைப் பிழையறச் சொல்லவேண்டும். அவன் புகழைச் சொல்லும் பாடல் களைப் பிழையறப் படித்துப் பழக வேண்டும்.

அடுத்ததுதான் எல்லாவற்றிலும் கடினமானது. இறைவனைத் தியானம் செய்வதென்பது, எளிய செய லன்று. மனம் ஒரு நிலையில் நிற்கும். இயல்புடையது அன்று. அதில் இறைவனுடைய திருவுருவை நிறுத்திப்பழக வேண் டும். புறக்கண்ணுல் கண்டு கண்டு அந்தத் திருவுருவத்தை அகத்திலே நிறுத்திப் பழகவேண்டும். வெளியிலே உள்ள வடிவங்களைக் கண்டு வழிபடுவதன் பயனே அதுதான்.

ச- 13 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/195&oldid=680576" இலிருந்து மீள்விக்கப்பட்டது