பக்கம்:சரணம் சரணம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சரணம் சரணம்

கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் பிறர் செய்யும் பூஜையைப் பார்ப்பதும் சரியை என்று சொல்லப்பெறும். நாமே பூஜைசெய்வது கிரியை. உண்முகத்திலே இறைவன் திருவுருவை நிறுத்திப் பயில்வது யோகம். அதற்குமேல் உண்டாகும் தெளிவு ஞானம். கோவிலேயும் திருவுருவங் களையும் கண்ணுல் கண்டதோடு நில்லாமல் உட்கொள்ள வேண்டும்; அகத்திலே வைத்துத் தியானம் பண்ண வேண் டும்; உண்முகப் பூஜை புரியவேண்டும். கோயிலில் உள் ள மூர்த்தியைக் கண்ணுல் கண்ட அளவோடு நின்றுவிட்டால் பயன் இல்லை. காண்பது வேறு; கண்டதை உள்ளே கொண்டு நிறுத்தி இன்புறுவது வேறு.

மனத்தில் இறைவனுடைய திருவுருவத்தை நிறுத்தி வைப்பது மிக மிக அரிய காரிய ம் ஆலுைம் விடாப் பிடியாகச் சாதனம் புரிந்தால் தியானம் கைகூடும். அதற் காக அன்பர்கள் அடிக்கடி மூர்த்தி தரிசனம் செய்து, படம் பிடிப்பவன் இருட்டறையில் போய்க் கழுவுவது போல, கண்மூடி உள்ளே பார்க்க முயல்வார்கள்; அந்த வடிவத்தைப் பாடிப் பாடி நினைப்பூட்டிக் கொள்வார்கள்.

பெரியவர்களுடைய திருப்பாடல்களிலே இ ைற வ னுடைய அங்க வருணனைகள் வரும். அத்தகைய பாடல் களைப் படிக்கும் போதெல்லாம் அந்த அங்கங்களே உள்ளே பாவனை பண்ணிப் பார்க்கவேண்டும். இடை விடாமல் நினைத்தால் திருவுருவம் மெல்ல மெல்ல உள்ளே தோன் றும். முதலில் தெளிவு இல்லாமல் தோன்றும். மன ஒருமைப்பாடு முறுக, முறுக அந்தத் திருவுருவம் தெளி வாகத் தெரியும். -

அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்?? என்று திருமூலர் சொல்வார். -

வெளியிலே கண்ட திருவுருவத்தை உள்ளே நிறுத்தி அன்புடனும் ஆவலுடனும் தியானம் செய்தால் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/196&oldid=680577" இலிருந்து மீள்விக்கப்பட்டது